Pages

Thursday 1 October 2015

தவக்குல் கர்மான்- யார் இவர் ?



நோபல் பரிசு பெரிசு பெற்ற முதல் அரேபிய பெண்மணி எப்படி போர்க்கள நாயகி ஆனார் ?  இவர் பற்றிய சுவாரஸ்யங்கள் ஏராளம் உண்டு. தவக்குல் பிறந்தது ஏமன் நாட்டில். 2011 ல்  'அலி அப்துல்லா சாலே' அரசுக்கு  எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கிணைத்து எதிர்த்ததும் அதனைத் தொடர்ந்து அவர் சிறை சென்றும் கூட விடுதலையான அடுத்த நாளே மீண்டும் பெரும் போராட்டத்தை நிகழ்த்தியதும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இன்று இருக்கும் இந்த இடத்திற்கு அவர் அத்தனை எளிதில் வந்துவிடவில்லை என்பதைக் காணும்போது நம் ஒவ்வொருவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி.
 
இஸ்லாமிய நாட்டில் பெண்கள் வீதிக்கு வந்து போராடியது ஏன்? இதற்கான விடை தெரிய வேண்டுமானால் ஏமனின் அரசியல் வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் பரவிக்கிடக்கும் நாடு தான் ஏமன். வடக்கே சவுதி அரேபியா கிழக்கில் ஓமான். 19 நூற்றாண்டின் ஏமனின் ’சனா’வைத்  தலைநகரமாகக் கொண்டு துருக்கிய  ஒட்டமான்கள் ஆட்சி செய்தனர். ஏமன் ஒரே நாடாக இருந்தாலும் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட வடக்கு ஏமன் தனியானதாகவும் பிரிடிஷ் காலனியாகத் தெற்கு ஏமன் தனியானதாகவும் கருதப்பட்டன.

1962 ம் ஆண்டில் ஒரு கிளர்ச்சியில் மன்னராட்சி முடிவுக்கு வந்து வடக்கு ஏமன் அரபுக் குடியரசு என்றும் 1967 ம் ஆண்டில் தெற்கு ஏமன் பிரிட்டிஷ் பிடியில் இருந்து விடுபட்டு ஏமன் மக்கள் ஜனநாயக கட்சியும் மலர்ந்தது. இப்போது  நம்ம பெரிய அணணன் அதாங்க அமெரிக்கா சவுதியோடு சேர்ந்து கொள்ள,மத்திய கிழக்கில் அமைந்த ஒரே கமியூனிச நாடான தெற்கு ஏமனை யாரு ஆதரிச்சிருப்பா? வேறு யாரு ரஷ்யா தான். அய்யோ பாவம் ரஷ்யாவும் சிதறிப்போன பின் தெற்கு ஏமன் நிலை குலைந்துப்போனது .  


ஆனால் வட தென் ஏமனின் எல்லைப் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டது.சும்மா இருப்பாரா பெரிய அண்ணன்?? சரி சரி நீங்க இனி சண்டை அடிச்சுக்க வேண்டாம் ஒன்றாக இருந்துக்கங்க என்று ரெண்டு பேரையும் பழம் விட வைத்து 1990 ஆம் ஆண்டு ஏமன் ஒரே நாடானது .  ஒருகிணைந்த ஏமனுக்கு கர்னல் அலி அப்துல்லாஹ் சாலே அதிபராகப் பொறுப்பேற்றார்.வட ஏமன் ஷியா பிரிவு தென் ஏமன் சன்னி பிரிவு. எண்ணையும் தண்ணீரும் கலக்குமா?

தெற்கு ஏமன் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பொருளாதார நெருக்கடி வறுமை உணவுத் தட்டுப்பாடு என்று மக்கள் அல்லல் பட்டு வேறு வழியில்லாமல் போராட ஆரம்பித்தார்கள். 2004 ஆம் ஆண்டு ஹூசைன் அல் ஹூத்தி ஒரு இயக்கத்தை ஆரம்பித்து சாலே அரசை எதிர்த்தார்.  ஆதலால் அவர்  கொல்லப்பட்டார். ஆனால் அவரது இயக்கம் அரசுக்கு எதிராய் வலுத்தது . 

தவக்குலின் தந்தை அப்தெல் சலாம் ஒரு வழக்கறிஞர். சாலே வின் கட்சியின் சட்ட அமைச்சராக இருந்தாலும் அதை வெறுத்தார். இவர் தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக்  கொடுத்தார். தந்தையின் ஊக்கத்தோடு வளர்ந்த தவக்குல் இள நிலை வணிகவியல் முதுநிலை பொலிட்டிக்கல் சயின்ஸும் படித்தார். இதன் நடுவே முஹம்மது அல் நஹ்மியை சில நிபந்தனைகளை முன் வைத்தே திருமணத்தை ஏற்றுக்கொண்டார். 
அவை:
* திருமணத்திற்குப் பின் என் படிப்பை நிறுத்தக்கூடாது.
* பர்தா அணிவதால்  முடங்கிப் போக மாட்டேன்.
* இந்த சமூகத்துக்காகவும்  பெண்களுக்காகவும் களம் இறங்கிப் போராடுவேன்.


கர்மானின்  நிபந்தனைகளை நஹ்மியும் ஏற்றுக்கொண்டு அவருக்கு பக்கபலமாய்  உதவினார். சாலேவின் சர்வதிகார ஆட்சிக்கு எதிராக  இவர் எடுத்துக் கொண்ட ஆயுதம் "பேனா''. சக பெண்கள் ஏழு பேருடன் சேர்ந்து "சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள்’( women journalists without chains) பத்திரிகைச் சுதந்திரத்திற்காகப் போராடும் அமைப்பை நிறுவி அதன் மூலம் அநீதிக்கு எதிராய் களமாடினார் கர்மான் .

முகத்திரை அணிவது பாரம்பரிய வழக்கமே தவிர அதை இஸ்லாம் வலியுறுத்தவில்லை என்று துணிந்து கூறினார்.  தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்து இந்த சமூகத்தை எதிர்கொண்டார். யாரும் பேசத்தயங்குவதையும் யாரும் செய்யாததையும் புதிதாய் செய்யும் போது இந்த சமூகம் எப்படி பார்க்குமோ அப்படிதான் கர்மானை பார்த்தது. பைத்தியக்காரி பெண்ணே அல்ல பேய், தண்டிக்கப்பட வேண்டியவள் என்றும் பல வசை மொழிகளை வாங்கிக்கட்டிக்கொண்டார்.  துனிசீயாவில் ஏற்பட்ட ஜாஸ்மின் புரட்சியும் 30 ஆண்டுகளாக எகிப்தை ஆண்ட ஹொஸ்னி முபாரக் இளைஞர் புரட்சியால் தூக்கி எறியப்பட்டார்.

இவை அனைத்தையும் அப்படியே ஏமன் மக்களிடம் முன்வைத்தார் தவக்குல். 2011 ஆம் ஆண்டு அரேபிய வசந்தம் என்னும் ஏமன் மக்கள் புரட்சி ஆரம்பமானது.

ஆயுதப்போராட்டங்கள் என்றைக்கும் தீர்வைத் தரப்போவதில்லை காந்தி, மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா இவர்களின் அகிம்சையே நம் ஆயுதம் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் தவக்குல்.மார்ச் மாதம் இவர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையில் 12 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 13 பேர் இன்னொரு போராட்டத்தில் கொல்லப்பட்டனர்.  அழுகையை விழுங்கி எஞ்சியுள்ளோரை மருத்துவமனையில் சேர்த்து மீண்டும் போராட்ட சதுக்கத்துக்கு வருகிறார் இந்த போர்க்களப் பூ. எத்தனை பேரைக் கொன்றாலும் போராட்டம் ஓயாது என்கிறார். 
2012 பிப்ரவரி மாதத்தில் 34 ஆண்டுகள் ஆண்டு அனுபவித்த அதிபர் பதவியை சாலே துறந்தார்.அதுவரை துணை அதிபராக இருந்த மன்சூர் ஹாதி ஏமனின் புதிய அதிபரானார். உள்நாட்டு குழப்பம், ஐ.எஸ் அமைப்பின் மிரட்டல், மனித வெடிகுண்டு தாக்குதல், மறுபடியும் ஹூத்தி கிளர்ச்சிப் படைகள் தலை நகர் சனாவை கைப்பற்றியதாக அறிவிக்க, அதிபர் ஹாதி சவுதிக்குத் தப்பிச்சென்றார்.இப்போது சவுதி விமானங்கள் குண்டு மழைப்பொழிய ஏமனின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. 

அகிம்சை வழியில் ஏமனின் வரலாற்றில் பெரும்பங்கற்றிய கர்மான், 2011ம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை லிபேரியா நாட்டின் எல்லென் ஜான்சன், லேமா குபோவீ ஆகியோருடன் சேர்ந்து பெண்கள் பாது காப்பு, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், பெண்கள் உரிமைகளுக்கான வன்முறையற்ற போராட்டம் ஆகியவற்றுக்காகப் பெற்றார். இதன் மூலம் நோபல் பரிசை வென்ற முதல் அரேபிய பெண்  மற்றும்  2ம் முஸ்லிம் பெண் என்ற பெருமையும் பெற்றார். உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பெண்ணும் இவர்தான். சமீபத்தில் தான் இந்த இடம் வேறொரு பெண்ணால் நிரப்பப்பட்டது.  


சகோதரி கர்மான்  பேச்சுத்திறன் மிக்கவரும் கூட. ஒருமுறை அவர் அணிந்திருக்கும் ஹிஜாப்  பற்றி பத்திரிக்கையாளர்கள் அவருடைய அறிவுத்திறனுக்கும், கல்வித்தகுதிக்கும் அது ஏற்றதாக உள்ளதா என கேட்ட போது அவர் கூறிய பதில்: 'பண்டைய கால மனிதன் பெரும்பாலும் நிர்வாணமாக இருந்தான். அவன் அறிவு வளர வளர அவன் ஆடைகளை அணியத் துவங்கினான். நான் இன்று யாராக இருக்கிறேனோ, என்ன அணிந்திருக்கிறேனோ, அது மனிதன் அடைந்துள்ள எண்ணங்கள் மற்றும் நாகரிகத்தின் உச்சத்தை பிரதிபலிக்கிறதே தவிர, பின்னடைவையல்ல. ஆடைகளை மீண்டும் களைவது தான் பின்னடைவாகும்.' என்றார் நெத்தியடியாக. ஏமன் நாட்டு மக்களால் இரும்பு பெண்மணி என்றும் புரட்சித்தாய் என்றும் புகழப்படுகிறார் கர்மான். 

அச்சுறுத்தல்கள் பல பக்கங்களில் இருந்து வந்தாலும் தன் கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்து கொண்டிருக்கிறார் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய். "வரலாற்றை திருப்பிப் பாருங்கள் மக்கள் புரட்சிக்குப் பிறகு உடனே எங்குமே ஜனநாயகம் மலர்ந்து விடுவதில்லை. அதற்குக் காலம் கொஞ்சம் எடுக்கும்.  ஏமனில் ஒரு நாள் ஜனநாயகம் மலரும்" என்று நம்புகிறார் இந்த போர்க்கள நாயகி. இன்ஷா அல்லாஹ் 
உங்கள் சகோதரி 
சபிதா காதர்

நன்றி:
விகடன், 
தி ஹிந்து,
 விக்கிப்பீடியா
 (islamiyapenmani)

Home             Sri Lanka Think Tank-UK (Main Link)

Monday 6 April 2015

The First Saudi Woman to be Licensed as a Lawyer

Congratulations to the women of Saudi Arabia! Bayan Mahmoud Al-Zahran, the first Saudi woman to be licensed as a lawyer, just opened the first female law firm, dedicated to representing women and bringing women's rights issues into the courts.


Home

Tuesday 3 February 2015

Sri Lanka - Kalmunai Muslim Woman

At a Meeting held at Kalmunai Municipal Council on Invitation of the Kalmunai Mayor Hon: Nizam Kariapper, Under the Leadership and Vision of Hon. Rauff Hakeem National Leader Sri Lanka Muslim Congress and Minister Urban Development and Water Supply & Drainage – The Proposal of Kalmunai Development Plan was also handed over to the Hon. Leader where in the presence of all Ministry and Department officials were present in this occasion arranged by the Mayor of Kalmunai. (From FB)






Monday 22 July 2013

Dr. ஷீமா முர்ஸி தந்தை முர்ஸியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்

கலாநிதி ஷீமா முர்ஸி தன் தந்தையை விடுதலை செய்யுமாறு கோரிக்கை;

பதவி கவிழ்க்கப்பட்ட முஹம்மத் முர்ஸியின் அன்பு மகள் கலாநிதி ஷீமா முர்ஸி அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டரீதியான ஜனாதிபதி ஆகிய எனது தந்தையின் தேகாராக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் ரத்தம் சிந்தும் ராணுவ சதிப் புரட்சித் தலைமையே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் தந்தை முர்ஸியை விடுவிக்குமாறும் அவரை கடத்திவைத்திருக்கும் இடத்தை அறிவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார் .சர்வதேச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கும் தொடர உள்ளதாக இன்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார் .

Women and Asylum

1/

Saturday 20 July 2013

The brutality of the mushrakeens on Muslims‬ ‪in Ramadhan‬ ‪in Kashmir‬

1/








Islamic city council bans female flatulence in Indonesia

An Islamic city council in the Indonesian province of Aceh, which follows Sharia, has banned female citizens from passing gas.

Sayyid Yahia, mayor of the city, told media that a ban was needed, as farting does not go well with the Islamic values of modesty. “Muslim women are not allowed to fart with sound, it’s against Islamic teachings,” he said. Meanwhile, the Indonesian Feminists Association told local media they will attempt to block the smelly law as they deem it discriminatory.

Fart banned

Talking to The Wadiyan, mayor Sayyid Yahia said the law aims to save people’s morals and behaviors. “When you see woman fart loud, she appears like a man. But if she sit sideways and pass it quietly, she looks like a woman,” Sayyid said.

Although the proposed law does not ban “quiet fart,” passing gas with sound is actually not uncommon in Southeast Asia, particularly for women consuming potatoes and peas. Obviously, women maintain that they feel healthier, farting loud. Fathima Khan, a medical doctor at the Al Banni Islamic Hospital in Aceh’s capital is critical of the proposed law: “There is no need to question this practice, let alone regulate it, because people do it for their health and safety,” she said.

The mayor declined to give The Wadiyan details of what the punishment would be for violators. While another member at the City council, who wished not to be named, said if convicted by the sharia court, the offender could receive 20 lashes for small farts and up to 3 months prison time for larger ones.
On another note, the local Islamic scholars were mostly divided over the law. Well-known Muslim activists like Bshar Abdulla voiced his objection, “How to pass gas is not regulated in Sharia. There is no mention of it in the Koran,” he said on his Twitter account. However, “the Islamic tradition and the values of modesty does not support women farting loud,” said Mehmood Hussain, a scholar and stenchy supporter of the law.
Under the new regulation, the mayor says that only women in the public space are going to be monitored. “It will be the responsibility of the husband to make sure that his wife upholds Islamic values at home”. He also argued that there is no scientific evidence supporting health benefits of passing gas, in Koran.

The City council will be evaluating the regulation in a week, after which it could turn into a by-law. (wadiyan)

Thursday 18 July 2013

An American Muslim activist has been appointed as the first Muslim student regent

1/
An American Muslim activist has been appointed as the first Muslim student regent






















First Muslim student regent at University of California
Over the objections of Jewish organisations, the University of California regents on Wednesday selected a new student regent whose advocacy for divesting from Israel, and her outspokenness against “Islamophobia”, has placed her in the centre of one of the most divisive issues in campus politics: Israeli-Palestinian relations.

Sadia Saifuddin of UC Berkeley will become the first Muslim to serve as “student regent designate” — for 2014-15 — after receiving unanimous support from the regents who voted.

Regent Dick Blum abstained, saying, “If you’re going to be the student representative, you have to represent all students. You don’t want to alienate them. ... So I’ve got a problem with this.” But many others at the regents’ meeting in San Francisco — including Jews — spoke in favour of appointing Ms. Saifuddin. She embodies “open-mindedness and tolerance”, said Jonathan Stein, a Cal law student who served on the selection committee. A social welfare major and member of student government, Ms. Saifuddin will serve as a nonvoting regent for one year before becoming a voting member in the next year, succeeding Cinthia Flores, a law student from UC Irvine.

To those who spoke on her behalf, Ms. Saifuddin is not only a brilliant student and kind mentor, she is an advocate for tolerance and inclusion of all students.

But to representatives of anti-defamation groups who addressed the regents and sent e-mails opposing the appointment, Ms. Saifuddin’s actions have fomented a “toxic and hostile” environment for Jewish students.

At the lunch break, she faced reporters. “I hope my leadership is seen in a wider perspective,” she said, noting that her divestment activities had been on behalf of a campus advocacy group called the Middle Eastern Muslim South Asian Coalition.

“I think the position on divestment is irrelevant. It may be my personal opinion, but that has nothing to do with my work as a student regent.”

Her main goals on the board will be improving student access to financial aid and making campuses more tolerable for all students, she said. — New York Times News Service



"கலிபோர்னியா யூனிவர்சிட்டி நிர்வாகக் குழுவுக்கு முதல் முஸ்லிம் 'சஃதியா சைபுத்தீன்' தேர்வு!

அமெரிக்க யூதர்கள் கடும் எதிர்ப்பு!!


அமெரிக்காவின் கலிபோர்னியா யூனிவர்சிட்டியின் நிர்வாகக் குழுவிற்கு, 21 வயது முஸ்லிம் மாணவி சஃதியா சைபுத்தீன், யூதர்களின் கடும் எதிர்ப்புக்களையும் மீறி தேர்வு செய்யப்பட்டார்.

26 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் முஸ்லிமான இவருக்கு, அமெரிக்காவின் யூதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவானவர், இஸ்ரேலுக்கு எதிரானவர், ஸ்கார்ப் அணிபவர்களுக்கு ஆதரவாக எப்போதும் களத்தில் நிற்பவர், போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்த யூதர்கள், பல்வேறு ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

நிர்வாகக் குழுவில் உள்ள 26 உறுப்பினர்களில் 25 நபர்கள், சஃதியாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் பெரும்பான்மை ஆதரவுடன் நிர்வாகக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்வுக்குப் பிறகு பல்கலைக்கழக மண்டபத்தில் பேசிய அவர், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். .

Monday 8 July 2013

Saudi Women Forced to sign pledges not to drive again

From June 17 till yesterday, several Saudi women have taken the wheel and drove their cars in some cities around the country. They were stopped by the police and given violation tickets for not carrying Saudi driving licenses!! They were also forced to sign pledges not to drive again! Carry on Saudi Government, let us drive you're embarrassing yourself just for the sake of distracting your citizens fighting for those insignificant issues!!

Sunday 7 July 2013

அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்; by ஸர்மிளா ஸெய்யித்

அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்.கீற்று இணையத்தில் வெளியான ஸர்மிளா ஸெய்யித் இன் கட்டுரை. Read more>>>




எகிப்தில் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி ஆகியோருக்கு ஆதரவான மக்கள் திரள்

எகிப்தில் கவிழ்க் கப்பட்ட சட்ட பூர்வமான ஆட்சி மற்றும் பதவி நீக்கப் பட்ட ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி ஆகியோருக்கு ஆதரவான மக்கள் திரள் .


ராபிஅதுல் அதவிய்யா மஸ்ஜித் சுற்றுப்புறம்...தமது கைகளில் தமது கபன் துணிகளை சுமந்த நிலையில் களமிறங்கியிருக்கும் சகோதரிகள்.
1/
2/

 3/


4/





































இராணுவம் நடத்திய ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ள எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களை
இராணுவம் கைதுசெய்து வருகிறது.


இதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்துள்ளது. சகோதரத்துவ இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்படுவதை இராணுவம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் மாளிகையின் பிரதிநிதி
ஜே கார்னே கூறியுள்ளார்.


இராணுவ நடவடிக்கைக்கு எதிராக ஐநா பொதுச் செயலாளர் பான்கீ மூனும்
கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எகிப்து இராணுவம் தன் நடவடிக்கையை நிறுத்திக்கொண்டு, ஜனநாயக அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம்
ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்னும் குரல் உலகம் முழுதும் வலுத்து வருகிறது.

Tuesday 4 June 2013

Muslim women lawyers aim to reconcile traditional beliefs with secular society

On a sweltering day in mid-July, Azizah al-Hibri, founder and chair of Karamah: Muslim Women Lawyers for Human Rights, presided over the graduation ceremony for the group’s 2012 Law and Leadership Summer Program. It was a festive occasion, held in the elegant drawing room of Karamah’s offices in Washington, D.C., housed in a building that once was the French ambassador’s residence.

(abajournal)

Home

Tuesday 28 May 2013

Women & Music; Meet the first all-Emirati, all-girl rock band

 
Members of the Al Ain-based rock band Random Stars are, left to right: Bushra Hassan Al Hashimi, 22, rhythm guitar, Aysha Abdullah Almaskari, 21, drums, and Hamda Al Ghaithi, 22, lead guitar.

The opening riff of the Deep Purple classic Smoke on the Water pounds out across a college hall.
It's a common enough scene, as the song has been a standard entry on the playlists of countless heavy rock bands for decades.

However there is nothing ordinary about the five musicians pumping out those familiar chords. They are Random Stars: the first Emirati all-girl rock band.


"Playing rock 'n' roll is awesome," says IT security student Bushra Hassan Al Hashimi, 22, who plays rhythm guitar. "We are the first girls from the UAE who play electric guitars as a band.

"It takes us away from the stress of homework and other college stuff - we play some music and we work on our songs. I've always liked rock 'n' roll."

The young women are all students at the Higher Colleges of Technology at Al Ain, and were brought together by English teacher Jackie Small from the UK. Remarkably, given the standard of their performance during an art exhibition at the college yesterday, only one of them had played an instrument before the band formed last year.

"I've always started bands wherever I've gone. I used to do that in the UK," said Ms Small. "When I started teaching here there were clubs so I thought I'd start a music club, but there was already one.

"So I decided to do a guitar club and there were a few people interested. I had in my mind a band so I got a drum kit and taught someone to play the drums, and I got a bass and taught them to play that.

"So we had the basis of a band, and last year they really got together and played a few songs."

Initially Ms Small was the driving force behind the project, but she was determined from the start to hand it over to the members.

"My idea was to let them own it, I had to step back so that they could take over so it's their band. They get together, they organise rehearsals, they do the hard work."

Initially the musicians, who all live in Al Ain, adapted classics such as Smoke on the Water and less rocky material such as the Jack Jones' 60s classic Baby, I'm Yours. However Ms Small added: "When they come back in September they're going to work on their own songs."

The band performs at a variety of college events such as graduation ceremonies and National Day celebrations.

"Generally the reaction here among the students has been great," said Ms Small.

Ms Al Hashimi said her family had backed her involvement in the band, adding: "My mother encourages us, they're supporting us."

Lead guitarist Hamda Al Ghaithi, 22, who is studying business and human resources, is the only band member who had previous musical experience. She took lessons at the House of Arts, a music centre in Al Ain, and hopes to take her interest in music much further - though not playing rock.

"I played piano and guitar for two years and studied in an academic way," she said. "I met Ms Small and she told me about how the girls wanted to play and make a band. At first I didn't like rock because I was studying classical guitar, but I prefer rock guitar now. I hope after I finish studying here that I will study music and play classical piano."

The other members are bass player Aysha Salem Al Kaabi, 20, who is studying IT and multimedia, drummer Aysha Abdullah Al Maskari, 21, who is taking the same subjects, and keyboard player Almayasa Al Kaabi, 22, who is studying IT.

“When I first played the keyboard I didn't know how to play it but I learned it by myself and also I added the guitar and now I enjoy it a lot,” she said.

Ms Al Maskari said: "It's very exciting being on stage. Drumming is hard work, but when I started doing the hard stuff I started to enjoy it because I didn't know I could do it."

Bassist Aysha Al Kaabi feels the same way: “I've always dreamed of playing an instrument and now that I joined the college I can actually play the bass easily.” (The National)

Home 

Women & Work

1/
இஸ்லாம்; பெண்களின் உடலுக்கு திரையிட சொன்னதே தவிர, அறிவிற்கும், அரசியலுக்கும் திரையிட சொல்லவில்லை ..Says; (M)uslim (R)efomist Mohamed

Tuesday 21 May 2013

Raha Moharrak; first Saudi woman to reach the top of Mount Everest

Raha Moharrak, a 27-year-old graphic designer, is the first Saudi woman to reach the top of Mount Everest. She wants to change the world's opinion of her country and countrywomen, and to help Saudi women change their opinions of themselves –– "to step outside of their comfort zones and dream –– try to push your limits," Raha says.

Monday 20 May 2013

நகராட்சி மேயராக 15 வயதான பள்ளிக்கூட மாணவி பஷீர் ஒத்மான்...!!

நகராட்சி மேயராக பதினைந்தே வயதான பள்ளிக்கூடம் செல்லும் இளம் மாணவி பஷீர் ஒத்மான்...!!

பலஸ்தீனத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக தினமும் உயிரை தியாகம் செய்து கொண்டிருக்கும் இன்று உலகம் அதிசயிக்கும் வண்ணம் ஓர் வியக்கும் வண்ணம் பலஸ்தீனம் செய்திருக்கிறது. சில தினக்களுக்கு முன்னர் பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உள்ள அல்லார் என்ற 9000 பேர்கள் மக்கள் தொகை கொண்ட சிறு நகரத்தின் நகராட்சி மேயராக பதினைந்தே வயதான பள்ளிக்கூடம் செல்லும் இளம் மாணவி பஷீர் ஒத்மான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாராட்டுதற்குரியது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கிடையிலும் அந்த நாட்டில் ஒரு இளம் மாணவி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்குரியது. இளைஞர்கள் மத்தியில் ஆளுமை குணத்தையும், தலைமைப் பண்பையும் வளர்க்கும் கூடிய முற்போக்கான சிந்தனை என பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பஷீர் என்ற அந்த மாணவி வெறும் சம்பிரதாயமாகவோ அல்லது பெயரளவிலோ மேயராக அலங்கரித்து அழகு பார்க்காமல், நகராட்சி அதிகாரங்களை அந்தப்பெண்ணின் கையில் கொடுத்திருப்பது என்பது பாராட்டுதற்குரியது. அந்த மாணவியே தன்னிச்சையாக நகராட்சி அலுவல்களை கவனிப்பதாகவும் கோப்புகளில் கையெழுத்திட்டு நகராட்சிக் கூட்டங்களுக்கும் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பது எவ்வளவு மகிழ்ச்சிகரமான விடயம்.

மக்களை சந்தித்து குறைகளையும் கேட்கும் அம் மாணவி மக்களின் முன்னிலையில் கூட்டங்களில் சுதந்திரமாக பேசுவதாகவும் இவை அனைத்துக்கும் நடுவில் தனது பள்ளிப்படிப்பையும் பாடசாலைக்கு செல்வதையும் முக்கியமாக செய்து வருகிறார். மிகப்பெரிய மக்கள் பணியை செய்யும் பஷீர், மக்களை கவர்ந்திழுக்கும் பலம் வாய்ந்த மேயராக திகழ்கிறார் அந்த மக்கள் அவரை ஒரு மாணவி என நினைக்காமல் தங்களுக்கு சேவை செய்ய வந்த தலைவர் என நினைக்கிறார்கள். எதிர்காலத்தில் தன் நாட்டை ஆளக்கூடிய பெரிய தலைவராக வரவேண்டும் என்பதே பஷீரின் ஆவலும், கனவும், இலட்சியமும் ஆகும். உலகத்திலேயே சிறிய வயது மேயரான பஷீர் ஒத்மான் தனது இலட்சியத்தில் வெற்றிபெற நாமும் பிரார்த்திப்போம்.  (நன்றி : முஹம்மத் பாரிஸ் via FB)
Home